உதவி பற்றி... PDF அச்சிடுக மின்னஞ்சல்
'உதவி' ஏன் உருவாக்கப்பட்டது?
இலங்கையில் யுத்தத்தினாலும், வேறு காரணிகளாலும் தமது பெற்றோர், உறவினர்களை இழந்து அல்லது வருமானம் பெறும் குடும்ப உறுப்பினரை இழந்து, சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு உதவ 'உதவி' உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கென உலகம் முழுவதும் ஏற்கெனவே பிரபலமான பெரிய நிறுவனங்கள் உள்ளனவே?
பெரியதும், பிரபலமானதுமான இந்த நிறுவனங்களின் உதவிகள், உதவி தேவைப்படும் எல்லோரையும் போய்ச் சேருவதில்லை. இந்த வகையில் கவனிக்கப்படாமல் நிராதரவாகக் கைவிடப்பட்ட ஏராளமானோர் உலகம் முழுவதும் உள்ளனர்.

சிறுவர் இல்லங்கள் எப்படித் தெரிவு செய்யப்பட்டன?
இலங்கை அரசினேதா, அரச சார்பற்ற நிறுவனங்களினேதா உதவிகள் கிடைக்கப் பெறாமல் அல்லது போதுமானதாக இல்லாமல் மிகவும் வறுமை நிலையிலுள்ள சிறுவர் இல்லங்கள் நேரடியாகப் பார்வையிடப்பட்டு தெரிவு செய்யப்பட்டன. எம்மால் போய் பார்க்கப்படாத சிறுவர் இல்லங்கள் இன்னும் வறுமை நிலையில் இருக்கக்கூடும்.

எப்படியான உதவிகள் 'உதவி'யால் வழங்கப்படுகின்றன?
நிதி மட்டுமே 'உதவி'யினால் சேர்க்கப்பட்டு சிறுவர் இல்லங்களுக்கு வழங்கபடுகிறது. போதுமானளவு நிதி கிடைக்காத நிலையில், பிள்ளைகளின் உணவுத் தேவைக்குக் கூட முழுமையாக உதவ முடியாமலுள்ளது என்பதே யதார்த்தமான நிலமையாகும்.

ஏன் பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை ஏற்றுக்கொள்வதில்லை?
பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான செலவு, குறிப்பிட்ட பொருட்களை விட அதிகமாகும். இதற்குரிய நிதி 'உதவி'யிடம் இல்லை. இதனை அனுப்பி உதவுவதற்குப் பெரிய நிறுவனங்களும் தயாரில்லை. இலங்கையின் பாதுகாப்பற்ற சூழலில் சிறுவர் இல்லங்களைப் பராமரிப்போரால் பொருட்களை நீண்ட தூரம் பிரயாணம் செய்து கொண்டுவந்து சேர்ப்பது சாத்தியமற்றது.

'உதவி'க்கு நிதி எப்படிச் சேர்க்கப்படுகிறது?
உதவ விரும்புவோர் தமது நிதியை நேரடியாக Kriegswaisenhilfe Sri-Lanka e.V என்ற அமைப்பின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது Kriegswaisenhilfe Sri-Lanka e.V பெயருக்கு காசோலையாக அனுபி வைக்கலாம். இணையத்தில் Pயலியட ஊடாகவும் அனுப்பலாம்.

"Kriegswaisenhilfe Sri-Lanka e.V"என்பது என்ன?
'உதவி'க்கான நிதிச் சேகரிப்புக்காக, ஜேர்மனிய நண்பர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு ஜேர்மனியில் பதிவு செய்யப்படுள்ளது. கிடைக்கும் நிதிக்கு ஜேர்மன் நிதித் திணைக்களத்தால் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

'உதவி' , "Kriegswaisenhilfe Sri-Lanka e.V" என்று ஏன் இரண்டு அமைப்புகள்?
'உதவி' என்பது அமைப்பல்ல. சிறுவர் இல்லங்களுக்கும், உதவுவோருக்கும் இடையிலான ஒரு வழி மட்டுமே. நிதி சேகரிப்பில இந்த வடிவம் சாத்தியமற்றதால், ஜேர்மன் சட்டங்களுக்கேற்ப Kriegswaisenhilfe Sri-Lanka e.V உருவாக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது.

'உதவி'க்கு வழங்கப்படும் நிதி 'உதவி' நிர்வாகச் செலவுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறதா?
வங்கிக்கணக்கு வைத்திருப்பதற்கான கட்டணம் மற்றும் நிதியை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான வங்க்கிகூலி மட்டுமே இந் நிதியிலிருந்து எடுக்கப்படுகிறது. ஏனைய செலவுகள் யாவும் (இணையம், தொலைபேசி, தபால், வெளியீடுகள், போக்குவரத்து, ஊடகங்கள், இன்ன பிற ...) 'உதவி' நண்பர்களினால் தனிப்பட்ட முறையில் செலவிடப்படுகின்றன.

'உதவி'யில் சம்பளம் வழங்கப்படுகிறதா?
இல்லை. எமது வாழ்க்கையைக் கொண்டுநடத்துவதற்காக 'உதவி' நண்பர்கள் நாங்கள் வேலைக்குப் போய்வருகிறோம்.

பிரபல நிறுவனங்களுக்கு கிடைத்திருக்கும் 'அத்தாட்சி' முத்திரை ஏன் 'உதவி'க்கு இல்லை?
ஜேர்மனியில் இந்த அத்தாட்சிப் பத்திரத்தைப் பெறுவதற்கு Deutsches Zentralinstitut für soziale Fragen/DZI என்ற சுயாதீன அமைப்பிடம் விண்ணப்பிக்க வேண்டும். இத்ற்கான கட்டணம் 1.500,- யூறோவாகும். வழங்கப்படும் அத்தாட்சிப் பத்திரம் ஒரு வருடதிற்கு மட்டுமே செல்லுபடியாகும். வருடாவருடம் புதுப்பிப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதற்குரிய நிதி 'உதவி'யிடம் இல்லை. இந் நிதியை யாரேனும் பொறுப்பெடுக்க முன்வந்தால், அத்தாட்சிப்பத்திரம் பெற விண்ணப்பிப்பதில் 'உதவி'க்குத் தடையில்லை.

'உதவி'யில் நிதி மோசடி இடம்பெறுகிறது என அறிந்தால் எங்கு முறைப்பாடு செய்வது?
மேலே குறிப்பிட்ட Deutsches Zentralinstitut für soziale Fragen/DZI என்ற சுயாதீன அமைப்பிடம் முறைப்பாடு செய்யலாம். "Kriegswaisenhilfe Sri-Lanka e.V" பதிவு இலக்கத்தைக் கொடுத்து ஜேர்மனியின் நிதித் திணைக்களங்களில் முறைப்பாடு செய்யலாம்.

'உதவி'யின் நிதி விபரங்கள் எவ்வளவுதூரம் வெளிப்படையானவை?
'உதவி'க்கு நிதியுதவி செய்வோர் தாம் விரும்பும் எந்த நேரத்திலும் அனைத்து நிதி விபரங்களையும் உதவி.நெற்றில் பார்வையிட முடியும். இதன் மூலம் நிதியுதவி செய்வோரிடமே நிதி விபரங்களைக் கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளோம். இது தவிர சிறுவர் இல்லங்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளும் வழி எல்லோருக்கும் என்றும் திறந்தேயுள்ளது.

வேறெந்த வழிகளில் நிதி விபரங்கள் சரிபார்க்கப்படுகின்றன?
கிடைக்கின்ற நிதியுதவி பற்றிய வங்கிக் கணக்கு அறிக்கைகள், நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளும் சிறுவர் இல்லங்களின் அத்தாட்சிக் கடிதங்கள் (இலங்கையில் குறிப்பிட்ட பிரதேசத்திற்குரிய அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படுபவை) என்பன வருடாவருடம் ஜேர்மன் நிதித் திணைக்களத்திற்கு காண்பிக்கப்படுகிறது.

பிள்ளைகளைத் தத்தெடுப்பதற்கு 'உதவி'யுடன் தொடர்பு கொள்ளலாமா?
இல்லை.

சிறுவர் இல்லங்களை 'உதவி' நேரடியாகப் பொறுப்பெடுத்து நடாத்துகிறதா?
இல்லை.

'உதவி' மத, அரசியல் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா?
இல்லை.

'உதவி'யின் அலுவலகம் எங்குள்ளது?
'உதவி'க்கென அலுவலகமோ, கிளைகளோ, தலைவர், செயலாளரோ, சம்பளம் பெறும் ஊழியர்களோ இல்லை. உதவ முன்வரும் நண்பர்களின் கூட்டுழைப்பே 'உதவி' ஆகும்.

'உதவி'யுடன் எப்படித் தொடர்புகளைப் பேணுவது?
நேர வசதியின்மை, ஆள் பற்றாக்குறைகள் காரணமாக தொலைபேசி, நேரடித் தொடர்புகள் நடைமுறையில் சிரமமானவை. இணையம் மூலமாகவோ (மின்னஞ்சல், இணையத் தொலைபேசி), தபால் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

'உதவி' இணையத்தளத்திற்குப் பின்னாலிருப்பது யார்?
இலங்கையிலும், வெளிநாடுகளிலுமுள்ள சில இலங்கைத் தமிழர்கள் இன, மத, மொழி வேறுபாடுகள் கடந்து சமூக அக்கறை கொண்ட ஏனைய நாட்டவர்களின் ஆதரவுடன் இணைந்து உருவாக்கியுள்ளதே உதவி.நெற். சமூகசேவை என்று வரும் நபர்களே பின்னர் பிரமுகர்களாகிவிடுவதும், நபர்களுக்கூடாகவே செயற்பாடுகள் பார்க்கப்படுவதும், கூட்டு வேலைமுறை சிதைந்து தனிநபர்கள் முக்கியத்துவம் பெறுவதும் போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு, உதவி- நபர்கைளப் பின் தள்ளி செயலை முன்னிறுத்தியுள்ளது. மொழிபெயர்ப்பு, இணையத் தளம், நிதியுதவி, ஆலோசனை, கண்காணிப்பு என்றும் இன்னும் பல வழிகளிலும் உதவி-யில் பங்கெடுக்கின்ற பெயர் அறிந்த, அறியாத அனைவரும் உதவி-யின் பின்னால் இருக்கும் பொறுப்பாளர்களே.

சாப்பாட்டுக்கு உதவி செய்வதால் இந்தப் பிள்ளைகளின் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?
தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வு -
அடுத்தவரின் மனிதாபிமானத்தை எதிர்பார்த்து வாழ வேண்டிய துயரம் -
எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி -
அடுத்தவேளை உணவே நிச்சயமில்லாத கொடுமை -
இக் குழந்தைகள், சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படாமல், தங்கள் வயதையொத்த ஏனைய குழந்தைகள் போன்ற வாழ்வுக்கு விரைவில் வரேவண்டும் என்பேத உதவி-யின் விருப்பம்.அதற்கான சமூக, அரசியல், பொருளாதார நிலமைகள் மாறும் வரை....
 


பேசும் படம்

1809.jpg

பேசும் படம்...

2309.jpg