|
இல்லங்கள் - சில குறிப்புகள் (2) |
|
|
21.01.2005 அன்று யோகர் சுவாமிகள் இல்லத்துக்குச் சென்றபோது நெற்றியில் விபூதிக் கீற்றுக்களுடன் பளிச்செனக் காணப்பட்ட சிறுமிகள் என்னைக் கண்டதும் உற்சாகமாக வரவேற்றனர். அவர்கள் முகங்களில் சந்தோசம் மிளிர்ந்தது. கண்களில் சிரிப்புத் தெரிந்தது. இருப்பினும், உள்ளுர ஏதோ ஒன்றை உணர முடிந்தது. வயத்தில் பெரியவர்கள் வெட்கி உதுங்கினர். ஆனால் அன்று முழுவதும் விளையாட்டும் , உரையாடலும், பாடலுமாக எங்கள் பொழுது கழிந்தது. இதனால் ஓர விலகியோர் உள்ளோ வந்தனர். இவ்வேளையிலேயே அதாவது அவர்களோடு ஊடாடி உறவாடியதன் மூலமே என்னால் பல விடயங்கயை அறியவும் உணரவும் முடிந்தது.
1. பிள்ளைகளின் தேவைகள் பல நிறைவேற்றப் படவேண்டியுள்ளன.
அ. கற்றலுக்கான இடவசதி, ஆசிரியர்கள். - ஒரு மண்டபமே கற்றல் , .இருத்தல், உறங்கல்யாவற்றுக்கும் பயன்படுத்தப் படுகிள்றது. இது கற்றலுக்கான சூழலை , மனோநிலையை தடைசெய்கின்றது. அத்துடன் ஆங்கிலம் கற்பதற்கு அப்பிள்ளைகள் ஆசையாக இருக்கின்ற போதிலும் அதற்கான பொருளாதாரா வசதியின்மையால் அதனை ஒழுங்கு படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் 'அக்கா ஸ்கூல்ல எல்லாரும் இங்கிலீஸில் கதைக்குங்கள். எங்களுக்குத்தான் தெரியாது' என்ற ஏக்கம் காணப்படுகின்றது. இதேபோல் விஞ்ஞானம், கணிதம், நடனம் போன்ற பாடங்களை கற்பதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதோடு கணணிபற்றிய அறிமுகமும் தேவையாகவுள்ளது.
ஆ. விளையாடுவதற்கான வசதிகள் - இல்லத்தின் இடமின்மையும் இல்லக்கட்டுப்பாடும் பிள்ளைகள் விளையாடமுடியாத நிலமையை ஏற்படுத்தியுள்ளன. எனவே இடவசதியினையும் விளையாட்டு உபகரண வசதியினையும் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் இல்லக்கட்டுப்பாடு தளர்வடைந்து அப்பிள்ளைகள் விளையாடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தமுடியும்.;
2. பிள்ளைகள் அடிக்கடி தம்மை யாராவது வந்து பார்த்துச் செல்வதையும் அவர்களுடன் சந்தோசமாக இருப்பதையும் விரும்புகின்றனர். அத்தோடு தம்மை, தமது திறமையை வெளிப்படுத்திக் காட்டுவதையும் விரும்புகின்றனர். எனவே அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும்.
3. பிள்ளைகளிடையே உறவினைப் பேணவேண்டும். - பிள்ளைகளிடையே ஒரே மனப்பான்மையின்மை நிலவுகின்றது. இதனால் அவர்களிடையே முரண்பாடுகளும் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இந்நிலமையினால் குறிப்பிட்ட சிலர் ஒன்றாக சேருதல் என்ற நிலமை காணப்படுகின்றது. இந்நிலமை இல்லத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு தடையாக அமையும் என்பதால் அவர்களிடையே நிலவும் முரண்பாடுகளை நீக்கி உறவினைப் பேணுவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
4. இல்லப் பராமரிப்பாளர்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளியற்ற உறவை ஏற்படுத்த வேண்டும். - இங்கு அவர்கள் உறவில் பராமரிப்பவர், பிள்ளைகள் என்ற நிலையே காணப்படுகின்றது. இதனால் பிள்ளைகள் தவறு செய்யும் போது (பிள்ளைகளிடைNயு பிரச்சனை, பரீட்சையில் குறைவான புள்ளிகள் எடுத்தல்) 'அடித்தல்' மூலம் தண்டிக்கப்படுகின்றனர். அத்தோடு தமது விருப்பப்படி கதைக்க முடியாத நிலை, குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே கதைத்தல் போன்ற நடவடிக்கைகளும் உள்ளன.
இதே போல் இல்லத்தில் சாப்பிடுதல் - சாப்பாட்டு வேளையில் எல்வோரும் வரிசையில் இருந்து தேவாரம் பாடிய பின் எவ்வித கதையும் இல்லாமல் குனிந்த தலை நிமிராமல் சாப்பிடுதல் வேண்டும.; அவ்வேளையில் தமது தேவையை சைகை மூலமே கேட்டு பெற்றுக் கொள்வதை காண முடிந்தது. அத்தோடு விருப்பமான சாப்பாட்டை(கறியை) கேட்க முடியாது. வைப்பதையே சாப்பிடலாம். இந் நிiமையானது எத்தகைய சுதந்திரம் கிடைத்த போதிலும் 'எனது வீடு' என்ற மனோநிலை ஏற்படுவதில் தடையாகவேயுள்ளது. அது மட்டுமன்றி கடிதம் போடுவதாயின் எழுதிக்கொடுத்தால் இல்ல மேற்பார்வையாளரே உறையிலிட்டு விலாசமிட்டு அனுப்புபவராக உள்ளனர். இது ஒரு வகையில் ஒழுங்கு நடவடிக்கையாக இருப்பினும் பிள்ளை தான் விரும்பியதை எழுத முடியாத நிலையும், தபாலகத்துக்கும் பிள்ளைகளுக்குமிடையேயான அனுபவத்தை இல்லாமற் செய்கின்றது.
எனவே இவற்றுக்கான மாற்று நடைமுறைகளை, அதாவது கட்டுப்பாடுகள் காணப்படும் அதேவேளை சுதந்திரமும் காணப்படுவதற்கான நிலமையையும் உருவாக்கவேண்டும். அதற்கு முதலில் இல்லப் பராமரிப்பாளர்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையே அந்நியோன்னியமான உறவு வளர்க்கப்பட வேண்டும். அத்தோடு இல்லத்தில் வளரும் பிள்ளைகள் ஒவ்வொருவரும் தமது வீட்டில் வாழும் என்ற மனப்பான்மையோடும் தமக்கு தாமே காவலர்கள் என்ற மனப்போக்கும் அவர்களிடையே வகர்க்கப்பட வேண்டும்.
5. இவற்றை விட இல்லத்தில் பொதுவாக பக்திப்பாடல் மட்டும் கேட்டல் பக்திப்படம், நாடகம் மட்டுமே பார்த்தல், அத்தகைய புத்தகங்கள் மாத்திரமே பார்த்தல் போன்ற தன்மைகள் காணப்படுகின்றன. இன்றய நவீன யுகத்தில் ஒரு பிள்ளையின் சுய வளர்ச்சிக்கு இத்தன்மைகள் மிகவும் ஒவ்வாததாகும். எனவே பிள்ளைகளின் பரந்த அறிவை விசாலப்படுத்தத் தக்கதான அறிவூட்டற் செயற்பாடுகளை ஏற்படுத்தவேண்டும்.
இத்தகைய நிலமைகள் காணப்பட்டபோதும் இவற்றினை பிள்ளைகள் வெளியில் சொல்வதற்குத் தயங்கும் நிலையும் அவ்வாறு சொல்வது பிழை என்ற மனோநிலையுமே அவர்களிடம் காணப்படுகின்றன. பொதுவாக இந் நிலமைகள் பராமரிப்பாளர்களின் தவறுகளோ அல்லது அவர்கள் வேண்டுமென்றோ செய்வது அல்ல. அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு தெரிந்தவரையில் இத்தகைய நடைமுறைகளே உள்ளன. சமகால சமூக சவால்களுக்கேற்ப பிள்ளைகளை எவ்வாறு பேணுவது என்பது தொடர்பான போதிய அறிவின்மை அவர்களிடம் நிலவுகின்றது.
ஒவ்வொரு பிள்ளையும் தன்னை உணர்ந்து, தன்னை கண்டு கொண்டு, தன்னை வளப்படுத்துவதற்கான களமாக இல்லங்கள் செயற்பட வேண்டும். அக்களம் மிக சுதந்திரமானதாகவும் அவர்களின் விருப்பங்கள் ஈடேறுவதாகவும் இருக்கவேண்டும். எனவே ஒட்டு மொத்தத்தில் தற்கால இல்ல நடைமுறைகளில் இருந்து ஒரு பாண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஏனெனில் அத்தகைய செய்பாடுகள் நிகழ்வதற்கான அத்தகைய ஆற்றல் மிக்க செயலாளிகளின் தேவை இல்லங்களுக்கு மிக அவசியமாகவுள்ளதையும் அறியக்கூடியதாகவுள்ளது.
- ஜெயகலா (இலங்கை) 31.01.2005
Trackback(0)
 |