|
இல்லங்கள் - சில குறிப்புகள் (4) |
|
|
கடந்த 08.05.2005 அன்று சக்தி| மகளிர் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். முழுநாளும் அவர்களுடன் கழிக்க வேண்டும் என்றே விரும்பினேன். ஆனால் நேரமின்மையால் சில மணித்தியாலங்களே அவர்களுடன் நிற்க முடிந்தது.
நாம் சென்றது ஞாயிறு தினம் என்பதால் அநேகமானவர்கள் நித்திரையாக இருந்தனர். நாங்கள் வந்துள்ளோம் எனத்தெரிந்ததும் எல்லோருமே எழுந்து முகம் கழுவி விபூதிக் கீற்றுக்களுடன் வந்து வணக்கம் கூறினர்.
அனேகமானவர்கள் மிகவும் வது குறைந்தவர்க்ளாகக் காணப்பட்டனர். முதலில் அவர்களுக்கு நான் யார் எனத் தெரியாத மிரட்சி இருந்தது. பின் அவர்களுடன் பாடி விளையாடி கதைக்க முற்பட்டதும் என்னுடன் சேர்ந்து கொண்டனர்.
அவர்களுடன் இருஎத நேரத்தில் என்னால் கண்டுகொள்ள முடிந்தவற்றை மிக சுருக்கமாக இங்கே எழுதுகிறேன்.
1. இடப்பற்றாக்குறை 50 இற்கு மேற்பட்ட பிள்ளைகள் ஒரு பழைய வீட்டில் இருக்கின்றனர். அவர்கள் படிப்பது, படுப்பது, சாப்பிடுவது, கதைப்பது எல்லாமே அவ் வீட்டு மண்டபத்தில்தான். அவர்களது உடுப்புகள், புத்தகங்கள் வைப்பதற்குக்கூட வசதிகள் இல்லை. யாவுமே நிலத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. இதனால் அறைகளின் இடத்தை இவையே நிரப்புகின்றன. இந் நிலைமையினால் இருக்கும் இடத்தின் அழகினை பேணமுடியாத நிலை காணப்படுகின்றது.
உள்ளே மிகவும் வெப்பமான சூழல். ஆனால் அதற்கான மாற்றுவழிகள் இல்லை.
இருக்கின்ற பிள்ளைகளின் தொகைக்கேற்ப, மலசலகூட வசதியும், குளியல் வசதியும் இல்லை. இதனாலும், ஒரே நேரத்தில் எல்லோரும் பாடசாலை செல்லவேண்டியுள்ளதாலும் எல்லோருமே அதிகாலை நான்கு மணிக்கே எழுஎதுவிட வேண்டிய நிலை நிலவுகின்றது. அந்தளவில் சிறுபிள்ளைகள் காணப்படும் (1ம் ஆண்டு) இவ்விடத்தில் இந்நேரம் பொருத்தமற்றதே. ஆனால் அவர்களுக்கென தனியான வசதிகள் இன்மையால் அவர்களும் பெரிய பிள்ளைகள் எழும்போதே எழவேண்டியுள்ளது.
2. விளையாடுவதற்கான இடமும், விளையாட்டுப் பொருட்களும் இப்பிள்ளைகளுக்கு விளையாடுவதற்கான நேரம் இருக்கின்றபோதிலும் விளையாடுவதற்கான இடம் மற்றும் பொருட்கள் இன்மையால் விளையாட முடியாத நிலை காணப்படுகின்றது.
3. உடைகள் போதாமை
4. புத்தகப் பைகள் தேவையாக உள்ளது.
5. மேலதிக வகுப்புக்களுக்கு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
6. இவைதவிர யோகர்சுவாமி இல்லம் பற்றி குறிப்பிட்டதுபோல் (http://ta.uthawi.net/index.php?option=com_content&task=view&id=51&Itemid=18) இங்கும் புத்தக அலுமாரியில் சமயம் சம்பந்தமான புத்தகங்களே காணப்படுகின்றன. இந்நிலைமையானது பிள்ளைகளை குறுகிய வட்டத்திற்குள்ளேயே வாழவைக்கும். அவர்களது பரந்துபட்ட சிந்தனைகளை வளர்க்கும் முகமாக பல்வேறு வகைப்பட்ட புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
அத்தோடு அனேகமான பிள்ளைகள் சிறுவர்களாகவே காணப்படுவதனால் அவர்களது தேவைகளை இங்குள்ள வளர்ந்த பிள்ளைகளே கவனிக்கிறார்கள். ஆனால் அது போதாமலுள்ளது. சிறுவர்களிடையே இன்னும் சுத்தம் பேணப்படவேண்டியுள்ளது.
மொத்தத்தில் இவ் இல்லம் இன்றும் பின்தங்கிய நிலையிலுள்ள ஒரு வீடாகவே காணப்படுகின்றது. இவ்வில்லத்தில் வாழும் பிள்ளைகள் அனைவரும் பின்தங்கிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே. இத்தகையவர்கள் இல்லத்தில் வாழும்போது அவர்களுக்கு புதிய சூழலை ஏற்படுத்துவதும் புதிய பண்பாட்டை ஏற்படுத்துவதும் அவசியமாகும். அதாவது அவர்களை புதியவர்களாக வாழவைப்பதோடு அதனூடு எந்தச் சூழலுக்கும் ஏற்ற மனநிலை உள்ளவாகளாக உருவாக்க வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறில்லாத நிலையே காணப்படுகின்றது. இதற்கு - 1. அவர்களிடையே நிலவும் பொருளாதாரமின்மை 2. பிள்ளைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது பற்றிய அறிவின்மை அதனை நடாத்துபவர்கள், மேற்பார்வை செய்பவர்களிடையே காணப்படுதல் - என்பவை காரணமாகும்.
என்னைப் பொறுத்தவரை இவர்களுக்கு ஒரு புது உலகத்தை கிருஷ்டிக்க வேண்டியுள்ளது. அதற்கு அவர்களது வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், பண்பாடு யாவற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு இடம் மிக அவசியமாயுள்ளது. ஏற்ற ஒரு இடத்தை அதாவது வசதிகளுடனான இடத்தை ஏற்படுத்துவதன்மூலம் ஏனையவற்றை படிப்படியாக அதற்கான வள, ஆளணியினர் அல்லது நடாத்துபவர்களுக்கான பயிற்சிகள் மூலம் செயற்படுத்த முடியும் என நம்புகின்றேன்.
வெளிநாடுகளிலுள்ளவர்கள் இந்தப் பிள்ளைகளின் அறிவுத் தேடலுக்குரிய நூல்களை சேகரித்து அனுப்பி வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உதவியும் இந்த விடயத்தில் கவனம் எடுக்க வேண்டும்.
- ஜெயகலா (இலங்கை) 26.05.2005
Trackback(0)
 |