|
பிள்ளைகளுடன் - 03.08.2005 |
|
|
கடந்த செவ்வாய்க் கிழமை (26.07.2005) கொலண்டிலிருந்து வருகை தந்திருந்த நண்பர் சாள்ஸ் குடும்பத்தாருடன் இல்லங்களிலுள்ள பிள்ளைகளைப் பார்ப்பதற்காக்;ச் சென்றிருந்தோம். முதலில் விபுலானந்தா இல்லப்பிள்ளைகளையே சந்தித்தோம் நீண்ட நாட்களுக்குப் பின்னர்தான் இப்பிள்ளகளை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
இம்முறை சந்திப்பு ஒரு புதிய அனுபவமாகவே எனக்குப்பட்டது. வந்தவர்களை வணக்கம் சொல்லி வரவேற்ற பிள்ளைகள் அவர்களை அழைத்துக் கொண்டு வரவேற்பு மண்டபத்தில் வட்டவடிவத்தில் அமர்ந்தார்கள். சாள்ஸ் குடும்பமும் பிள்ளகளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்காமல் அவர்களில் ஒருத்தரைப் போல் வட்டத்தில் பிள்ளைகளுடன் சேர்ந்திருந்தனர். இவ்வாறான நடவடிக்ககளே பிள்ளைகளுக்கும் எங்களுக்குமான உறவை வலுப்படுத்தக்கூடியது போன்று இருந்தது. சாள்ஸ் ஒவ்வொரு பிள்ளைகளையும் தொட்டு அவர்களுடய பெயர்களை கேட்டமுறமை: பிள்ளைகளிடம் தங்களை பேதமின்றி அரவணைக்கும் கைகள் எங்கும் பரந்து இருக்கின்றன என்ற நம்பிகை பிறந்திருக்கும் என்று நம்புகின்றேன்.
பரஸ்பரம் ஒவ்வொருத்தரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட பின்னர் பிள்ளைகளை பாட்டுப்பாடிக் காட்டும்படி கேட்டனர். அலைவீசும் கடலோரம் மனசெல்லாம் துயரீரம் என்ற பாடலை கோபிதராஜ் என்ற இல்ல மாணவன் பாடினான். அவன் அந்த பாட்டை பாடிய தொனி வந்தவர்கள் ஒவ்வாருவருடய கண்களிலிருந்தும் கண்ணீரைத்தான் பார்க்க முடிந்தது. இவர்களோடு சேர்ந்து ஆழிப் பேரலையின்போது தாயை சொந்தங்கள இழந்து துக்கத்தை வெளிக்காட்டாமல் இருந்த பிள்ளகளும் சேர்ந்து அழத்தொடங்கினார்கள். சாள்சும், குடும்பமும் பிள்ளகளுக்கு ஆறதல் கொடுத்து அரவணத்துக்கொண்டனர். ஒரு பிள்ளை தன் தாயிடமிருந்து என்னத்தை எதிர்பார்க்கின்றதோ அது இன்னுமொரு இடத்தில் கிடைக்கும் போது தன்னுடைய அடக்கமுடியாத துயரத்தைக்கூட பகிர்ந்துகொள்ள தயாராகின்றது என்பதுதான் உண்மை.
அதன்பின் பிள்ளைகளுக்கு தாங்கள் கொண்டுவந்த இனிப்புக்களையும் கொடுத்து பிள்ளைகளுக்கு நம்பிக்கயூட்டு;வண்ணம் அவர்களுடன் கலந்துரையாடி அங்கிருந்து புறப்பட்டு கதிரொளி இல்லத்தை வந்து சேர்ந்தோம். கதிரொளி இல்லத்தப் பொறுத்தவரையில் பிள்ளகள் வந்தவர்களை வரவேற்று பாட்டுப்பாடி கிராமிய நடனங்கள் ஆடிக்காட்டினர்கள். இருந்தும் பிள்ளைகளிடம் ஒரு கலகலப்பற்ற தன்மையைக் காணக்கூடியதாக இருந்தது. இங்கு பிள்ளைகளுக்கும் இல்ல நிருவாகத்திற்குமிடையே ஒரு பெரு இடைவெளி காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதற்கு வெறுமனே நிருவாகத்தின் திறமையின்மை என்பதைவிட பிள்ளைகளுக்கும் நிருவாகத்திற்குமான உறவில் பெரு இடைவெளி இருப்பதைக்காணக்கூடியதாக இருக்கின்றது.
நிருவாகத்தைப் பொறுத்தவரையில் ஆதரவற்ற சிறுவர்களுக்கு இருக்க இடமும் சாப்பாடும் கொடுத்தால் சரிதானே வேறு என்னத்தை இவர்களுக்கு கொடுப்பது என்ற போக்கு இவர்களிடம் கிடப்பது போல் எனக்குப் படுகின்றது. இது அவர்களின் நடவடிக்கையிலிருந்து என்னால் அவதானிக்ககூடியதாக இருக்கின்றது. இந்.நிலமையை சக்தி இல்லத்திலும் காணக்கூடியதாக இருக்கின்றது ஏனெனில் இரண்டு இல்லங்களும் ஒரே நிருவாகத்தால் நிருவகிக்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
1. இல்லத்தில் பொறுப்பான அல்லது பதிலிறுக்கக் கூடிய எவரையும் கண்டுகொள்ள முடிவதில்லை. 2. பிள்ளைகளிடையே ஒரு உற்சாகமின்மையான தன்மையைக் காணக்கூடியதாக இருந்தது. 3. பிள்ளைகளும் சுற்றுச்சூழலும் துப்பரவின்மை. இது சக்தியைக் காட்டிலும் கதிரொளியியே கூடுதலாகக் காணப்பட்டது. 4. பிள்ளைகளுக்கான வளப்பற்றாக்குறை. 5. பிள்ளைகளுக்காக கொடுக்கப்படும் பொருட்கள் பிள்ளைகள் உடைத்துப்போடும் என்பதால் பகிர்ந்து கொடுக்க நிருவாகம் பயப்பிடுதல்.
இவைகளை வைத்துக் கொண்டே சிலவற்றை எம்மால் அனுமானிக்க முடிகின்றது.
இவைகளுக்குமப்பால் இங்குள்ள பிள்ளைகள் பல்வேறு திறமைகளுடன் இருப்பதையும் காணக்கூடியதாக இருப்பதும் இங்கு குறிப்படத்தக்கது. இந்த நிலமைகளிலிருந்து நிருவாகத்திடையே பிள்ளைகளின் வளர்ப்பு முறையிலும் பராமரிப்பு முறையிலும் மாற்றம் வரவேண்டுமென்பதே உண்மை.
மறுநாட் புதன்கிழமை மாலை 4 மணியளவில் யோகர் சுவாமிகள் இல்லத்துக்கு சென்றோம். நாங்கள் போயிருந்த நேரம் பிள்ளைகளுக்கு பிரத்தியேக வகுப்பு நடந்து கொண்டிருந்து. சிலர் பிரத்தியேக வகுப்புக்களுக்காக வெளியில் சென்றிருந்தனர். ஏதோ ஒரு வகையில் பிள்ளைகளிடையேயும் நிருவாகத்திடையேயும் ஒரு ஒழுங்கைக் காணக்கூடியதாக இருந்தது. சாள்ஸ் என்னிடம் கேட்டார் நாங்கள் வருவதை இவர்களுக்கு முன்னமே அறிவித்தீர்களா என்று, இந்த நிலமையை அவதானித்து விட்டோ என்னமோ தெரியாது அவர் அப்படிக் கேட்டது.
பிள்ளைகளிம் முன்னையவிட ஒரு வெளிப்படைத் தன்மையையும் கலகலப்பையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. வந்தவர்களுக்கு எல்லோரும் வணக்கம் சொல்லி வரவேற்றனர். தங்களுடைய இல்ல தற்போதைய நிலமைகளை எடுத்துக்கூறினர். பிள்ளைகளும் ஆர்வத்தோடு பாட்டுப்பாடி கதைசொல்லி சந்தோசப்படுத்தினர்.
வந்தவர்கள் அவசரமாகச் செல்ல வேண்டியிருந்ததால் அவசர அவசரமாக பிள்ளைகளிடமிருந்து விடைபெற வேண்டியேற்பட்டது. எது எவ்வாறிருப்பினும் இவ்வாறான பிள்ளைகளுடனான சந்திப்பென்பது வெறுமனே ஒருரெண்டு மணித்தியாலத்துடன் முடியும் விடயமல்லது. அவர்களிடமிருந்தும் நாம் நிறைய கற்கவேண்டும் எங்களிடமிருந்தும அவர்கள் கற்பதற்கு நிறைய இருக்கின்றது எனவே அவர்களுக்காகவேனும் ஒரு நாளை ஒதுக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
- யசிகரன் (இலங்கை) 03.08.2005
Trackback(0)
 |