நிலமை - 06.09.2006 அச்சிடுக
இலங்கையிலிருந்து....
 

வடகிழக்கில் தொடர்ந்தும் போர் நடைபெற்றுக்கொண்டிருப்பதனால் தொடர்புகளைப் பேணுவதென்பது மிகவும் கஷ்டமாகவேயுள்ளது.

மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதி, கட்டுப்பாடற்ற பகுதியென இரு பகுதிகளாக உள்ளது. உதவியினால் வழங்கப்படும் உதவிகளைப் பெறும் இல்லங்களில் மூன்று இல்லங்கள் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதியிலே இருக்கின்றன. இந்த நெருக்கடியினால் முக்கியமான வேலைகளைச் செய்து முடிப்பது சிரமமாக உள்ளது.

இதுவரை சிறுவர் இல்லங்களுடன் தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி வசதி இருந்தது. தற்போது இத் தொடர்புகள் அனைத்தும் அரசினால் துண்டிக்கப் பட்டுள்ளதால் அங்கிருந்து ஏதாவதொரு வழியில் தகவல்கள் வந்தால் மட்டுமே உதவியில் அவை பற்றி எழுத முடியும். அது மட்டுமல்லாமல் அப்பகுதிக்கான போக்குவரத்து வசதிகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

போர் தொடங்கிய பின்னர் உதவி தவிர்ந்த ஏனைய இடங்களிலிருந்து பெற்ற உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் பெரும் சிரங்களை சிறுவர் இல்லத்தினர் எதிர்நோக்குகின்றனர்.

நிலைமைகள் இவ்வாறிருக்கின்ற போதும் பிள்ளைகள் பாதுகாப்பாகவே இருக்கின்றார்கள் என்று இல்லப் பொறுப்பாளர்கள் கூறுகின்றார்கள்.  


மேலதிக தகவல்கள் கிடைக்கும்போது அனுப்பி வைக்கின்றேன்.

- யசிகரன்
(இலங்கை)
06.09.2006)