திரும்ப வந்தனர் அச்சிடுக மின்னஞ்சல்
அன்புடன் உதவி நண்பர்களுக்கு,


கடந்த 09.03.2007 தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறிய விபுலானந்தா, கதிரொளி, சக்தி இல்லக் குழந்தைகள் மீண்டும் தமது இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர்.

இல்லங்களின் உடமைகள் எதுவும் இல்லாத நிலையிலுள்ள வெறுமையான ஒரு இடத்திற்கே வந்து சேர்ந்துள்ளனர்.

தங்களுடைய நாளாந்த அடிப்படைத் தேவைகளுக்குரிய பொருட்களைக் கூட அவர்கள் புதிதாக வாங்கவோ அல்லது வேறு வழிகளிலிருந்து பெற்றுக்கொள்ளவோ வேண்டிய நிலையிலேயே உள்ளனர்.

இவற்றுக்கப்பால் நாளாந்தம் மோதல், குண்டு வெடிப்பு என்ற பயங்கரம் நிறைந்த ஒரு போர்ச்சூழலிலேயே திரும்பவும் தமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

இல்லத்திலுள்ள பிள்ளைகள் அனைவரையும் புகைப்படம் பிடித்து பதிவு செய்த பின்னரே இராணுவத்தினர் இவர்களை இல்லத்தில் தங்குவதற்கு அனுமதித்துள்ளனர். அது மட்டுமல்லாது பெற்றோர் இருந்தும், குடும்ப பொருளாதார நிலைமையால் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்த பிள்ளைகள் ஒரு சிலரும் கதிரொளி, சக்தி இல்லங்களில் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களும் தற்போதுள்ள இராணுவக் கெடுபிடிகளினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

போர்ச் சூழல் காரணமாக வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை நல்ல சூழலுள்ள பிரதேசத்தில் தங்கவைப்பதற்காக பல தனவந்தர்களிடம் உதவி கோரியிருந்த போதும் அது கைக்கொடுக்கவில்லை. ஆதலால் அப்பிள்ளைகளை மீண்டும் போர் சூழ்நிலை நிறைந்த அவர்களது இல்லத்திற்கே திருப்பி அனுப்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களிலாவது அப்பிள்ளைகளுக்கு நீங்கள் தங்களாலியன்ற உதவிகளை தந்துதவுவீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு;. அது உங்களால் அப்பிள்ளைகளுக்கு கிடைக்கின்ற மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

காலம் தாமதித்து தகவல்களைத் தருவதற்கு வருந்துகின்றோம்.


நன்றி.


- யசிகரன்
(இலங்கை)
28.06.07
Trackback(0)
Comments (0)Add Comment

Write comment

busy
 

பேசும் படம்

3009.jpg

பேசும் படம்...

0909.jpg