| பத்திரிகை அறிக்கை - 16.03.2008 |
|
|
|
06.03.2008 இல் ஈக்குவாலிற்றி பதிப்பக உரிமையாளரும், பத்திரிகையாளரமான வெ.யசிகரன் கொழும்பில் கைது செய்யப்பட்டார். கூடவே, அவரது வாழ்க்கைத் துணை வளர்மதியும் கைது செய்யப்பட்டார். இலங்கை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால், இவர்களைத் தொடர்ந்து, அதே வாரத்தில், பிற 4 பத்திரிகையாளர்களும் கைதானார்கள். யசிகரன் உதவியின் (http://www.uthawi.net/) தொடர்பாளராகக் கடமையாற்றியவர். ஜேர்மனியைக் மையமாக கொண்டுள்ள, உதவி அரசியல், மதசார்பற்ற ஓர் ஊடகக் கூட்டுவேலை ஆகும். 2003இலிருந்து உதவி கிழக்கிலங்கையிலுள்ள 4 சிறுவர் இல்லங்களிற்கு ஆதரவளித்து வருகிறது. யசிகரன் உதவியின் இவ் வேலைக்கு உதவும் மிக முக்கியமான நபராவார். இலங்கை அரச அதிகாரிகள் கைதான அனைத்து பத்திரிகையாளர்களையும், கைதான முதல் வாரத்தில், சித்திரவதை செய்துமுள்ளார்கள். இப் பத்திரிகையாளர்களது கைதானது, சிறுவர் இல்லங்களையும் வெகுவாய்ப் பாதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இச் சிறுவர் இல்லங்கள் உடனடிப் பணப் பற்றாங்குறையை எதிர்நோக்கியுள்ளன. கிழக்கிலங்கையில் அமைந்துள்ள இந்த சிறுவர் இல்லங்களிலுள்ள 200 இற்கும் மேற்பட்ட அநாதரவான சிறுவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி கைதுகள் பற்றிய மேலதிக தகவல்களை கீழுள்ள இணைய முகவரிகளில் காணலாம்: http://www.rsf.org/article.php3?id_article=26200 http://news.bbc.co.uk/2/hi/south_asia/7293303.stm http://www.cpj.org/news/2008/asia/sri11mar08na.html யசிகரன் மற்றும் அவரது வாழ்க்கைத் துணையான வளர்மதியின் கைது தொடர்பாக நாம் மிகுந்த கவலை அடைந்துள்ளோம். அத்துடன் யசிகரன் தொடர்பாளராக இயங்கிய 4 சிறுவர் இல்லங்கள் குறித்தும் நாம் பாரிய கவலை கொள்கின்றோம். இலங்கை அரசாங்கம், சிறுவர் இல்லங்களுக்கான பணமும், உதவியும் அநாதரவான குழந்தைகளுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த கோருகின்றோம். பத்திரிகையாளர்கள் மீதான சித்திரவதைகளை நிறுத்தி உடனடியாக அவர்களை விடுவிக்க அல்லது இந்த விடயத்தில் எவ்விதப் பாரபட்சமுமற்ற சீரான விசாரணையை நடத்த இலங்கை அரசை கோருகிறோம். மனிதாபிமான, மனித உரிமை அமைப்புகளை இவ் விடயத்தில் தலையிட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளர்களை விடுவிக்கவும், உணவு, மற்றும் பிற உதவிகள் அநாதரவான இந்தக் குழந்தைகளுக்குக் உடனடியாக கிடைக்கவும் உதவும்படி கேட்டுக் கொள்கின்றோம். நாங்கள் ஆதரவளிக்கிற சிறுவர் இல்லங்களைப் பற்றியதும் உதவி பற்றியதுமான தகவல்களை அறிவதற்கான இணைய முகவரி: http://www.uthawi.net இப் பத்திரிகை அறிக்கை உதவி.நண்பர்கள்.இங்கிலாந்து ( இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் ), உதவி.நண்பர்கள்.கனடா ( இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் ) இலிருந்து ஊடகங்களுக்கும், மனித உரிமை அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 16.03.2008
Set as favorite
Bookmark
Email This
Hits: 1371 Trackback(0)
Comments (0)
![]() Write comment
|
பேசும் படம்![]() |
பேசும் படம்...![]() |






Tweet This ->