தலை குனிந்து வாழ்ந்த பேதையை அடக்கமெனும் ஆயுதம் கொண்டு அடக்கிவிட்டனர் !
அன்புக்கு அடிபணிந்த மடந்தையை அடிமைச் சங்கிலி கொண்டு பூட்டிவிட்டனர் !
இரக்கத்திற்கு மயங்கிய பேதையை பரிவு எனும் தடவலினால் தட்டிவிட்டனர் !
மலர்களாய் மணம் பரப்பிய மங்கையை மலர் நுகரும் வண்டுகளால் அழித்துவிட்டனர் !
பூமாதேவியாய் பொறுமை காத்த பெண்களோ கல்லறைகளுக்கு காவலாகிவிட்டனர் !
கவிதைக்கு அழகு சேர்த்த கன்னியோ கல்யாணச் சிறைக்குள் கைதியாக்கப்பட்டனள் !
இவ்வாறு-
பெண்களின் தன்மையை பெண்மை என்ற பெயரில் தரம் தாழ்த்திய சமுதாயத்தை புறம் தள்ளி புறப்படு பெண்ணே
புது யுகம் படைத்து அடிமைகளாக மாண்ட மடந்தைகளின் கல்லறைகளை முற்றுகையிடுவோம்.
- விமலசாந்தி (வகுப்பு 9) (யோகசுவாமி மகளிர் இல்லம்)
10/2004
Trackback(0)
 |