|
தேள் கண்டார், தேளே கண்டார் |
|
|
தேள் கண்டார் தேளே கண்டார் திண்ணையில் இருந்த பொன்னார் தூள் கொண்டுவாரும் என்றார் சுவருக்கு அப்பால் நின்று.
நீள்கொண்டை விழியாளோ நெடிலோசையுடனே கூவ வாள் கொண்டு வருவேனென்று வயித்திலிங்கம் போனான்.
மூலைக்குட் புகுந்த தேளோ முன் வைத்த தனது காலினை அப்பால் ஊன்றக் கருதிற்றுப் போலும் என்று வேலப்பர் சொல்லிக் கொண்டு வெளியாலே நழுவிவிட்டார்.
மாலைக்கு மயக்கம் தோன்ற பகலவனும் மறைந்து போனான்.
விளக்குமாறு எடுத்து வாரும் விடக்கூடாது முடிக்க வேண்டும் துளியுமே அஞ்சேன் என்று சுந்தரம் மெல்ல வந்தான்.
விழி பிதுங்கி மூலை பார்த்து கதி கலங்கிய பேரெல்லாம் களிப்புறுமாறே அங்கு கனகம்மா மாமி வந்தாள்.
மண்ணெண்ணெய் போத்தல் எங்கே எடுத்து வா அதனை வார்த்தால் கண்ணாண எந்தத் தேளும் கட்டாயம் செத்துப் போகும். அண்ணரின் திவசத்தன்றும் அதைத்தான் செய்தோம் என்றாள்.
உண்மையாய் சொல்லப் போனால் ஒருவரும் அசைந்தாரில்லை.
சின்னவள் விளையாட்டாலே சிங்காரமாய் திரும்பி வந்தாள். என்ன சங்கதி என்று ஏகி எதிர் உற்ற மூலை புக்காள். அன்னவள் கையால் அந்த அழகான தேளைத் தூக்க செத்த தேள் கண்டு சத்தமின்றி வீரரெல்லாம் மொத்தமாய் தலை குனிந்தார்.
- விஸ்ணுபிள்ளை (வகுப்பு 8) (கதிரொளி சிறுவர் இல்லம்) 12/2004
Trackback(0)
 |