புதுயுகம் படைப்போம் அச்சிடுக மின்னஞ்சல்
தலை குனிந்து வாழ்ந்த பேதையை
அடக்கமெனும் ஆயுதம் கொண்டு
அடக்கிவிட்டனர் !

அன்புக்கு அடிபணிந்த மடந்தையை
அடிமைச் சங்கிலி கொண்டு
பூட்டிவிட்டனர் !

இரக்கத்திற்கு மயங்கிய பேதையை
பரிவு எனும் தடவலினால்
தட்டிவிட்டனர் !

மலர்களாய் மணம் பரப்பிய மங்கையைputhuyugam
மலர் நுகரும் வண்டுகளால்
அழித்துவிட்டனர் !

பூமாதேவியாய் பொறுமை காத்த பெண்களோ
கல்லறைகளுக்கு காவலாகிவிட்டனர் !

கவிதைக்கு அழகு சேர்த்த கன்னியோ
கல்யாணச் சிறைக்குள் கைதியாக்கப்பட்டனள் !

இவ்வாறு-

பெண்களின் தன்மையை
பெண்மை என்ற பெயரில்
தரம் தாழ்த்திய சமுதாயத்தை
புறம் தள்ளி
புறப்படு பெண்ணே

புது யுகம் படைத்து
அடிமைகளாக மாண்ட
மடந்தைகளின் கல்லறைகளை
முற்றுகையிடுவோம்.

- விமலசாந்தி (வகுப்பு 9)
(யோகசுவாமி மகளிர் இல்லம்)

10/2004
Trackback(0)
Comments (0)Add comments

Write comment

busy
 

பேசும் படம்

0709.jpg

பேசும் படம்...

2109.jpg