|
பிடித்த 10 01. விளையாடப் பிடிக்கும். 02. பாடப் பிடிக்கும். 03. போட்டிகளில் பங்குகொள்ளப் பிடிக்கும்.. 04. பூந்தோட்டம் வைத்திருக்கப் பிடிக்கும். 05. பரீட்சையில் கூடுதல் பெறுபேறுகள் எடுக்கப் பிடிக்கும். 06. இடங்கள் சுற்றிப் பார்க்கப் பிடிக்கும். 07. எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிடப் பிடிக்கும். 08. சுதந்திரமாக வாழப் பிடிக்கும். 09. சந்தோசமாக இருக்கப் பிடிக்கும். 10. வளர்ந்தபின் எதிர்பார்க்கும் வேலை கிடைப்பது பிடிக்கும்.
பிடிக்காத 10
01. மற்றவர் எங்களை ஏசுவது பிடிக்காது. 02. உயிர்களைத் துன்புறுத்துவது பிடிக்காது. 03. மற்றவர்களுக்கு உதவாமல் இருத்தல் பிடிக்காது. 04. மதத்தால் மனிதரைப் பிரிப்பது பிடிக்காது. 05. அநாதை என்று மற்றவர் எம்மை ஏளனம் செய்வது பிடிக்காது. 06. சும்மா இருப்பது பிடிக்காது. 07. எப்போதும் அழுது கொண்டிருப்பது பிடிக்காது. 08. ஏமாற்றுவதும், ஏமாறுவதும் பிடிக்காது. 09. பிள்ளைகளை வேலை வாங்குபவர்களைப் பிடிக்காது. 10. பிள்ளைகளை உதாசீனப்படுத்துவது பிடிக்காது.
- தர்சினி, கோமளேஸ்வரி, மங்கையற்கரசி, சிறிதாதேவி, விஜிகலா, நதிசா, உமாபிரியங்கா, சாமினி, பவித்ரா, ஜெயசாந்தினி, கோகிலவதனி, சுவிதா, இராஜேஸ்வரி, குலேந்தினி, பிரதிபா, கஜேந்தினி, கிசோனியா, கிஸ்மிதா, சுவிதினி, குமுதினி, ஜெயமதி, உதயகலா (வகுப்பு 4-11) (யோகசுவாமி சிறுமியர் இல்லம்) 08/2005
Trackback(0)
 |