எப்போது? அச்சிடுக மின்னஞ்சல்
அன்று தொட்டு இன்றுவரை அழிகின்ற எம் மக்கள்
கன்றிழந்து தாயிழந்து கனத்தவுயிரிழந்து
நின்று உயிர் வாழ்கிறார் நிற்க ஒரு கேள்வி
என்று தணியுமிந்த சமாதான தாகம் சொல்?

தந்தையினை இழந்தவர்கள், தாயைப் பிரிந்தவர்கள்
சந்தையிலே செல்விழுந்து சவங்களாய் கிடந்தவர்கள்
கந்தை துணியோடும் கால் வேறு கை வேறாய்
மந்தைகளாய் மரணித்துப் போனவர்கள்

வந்து விடுகிறேனென்று வாய் நிறையக் கூறிவிட்டு
சந்திகளெல்லாம் சடலமானவர்கள்
நொந்துருகி துயரத்தால் நொடியில் உடைந்தவர்கள்
அந்த நாள் தொட்டு அதிகரிக்கக் காணுகின்றோம்.

war and peace
பள்ளிக்குச் செல்லும் பாலப் பருவமதில்
துள்ளித் திரியுமந்த துயரமறியா காலமதில்
வள்ளிக் கிழங்குண்டு வாழ்ந்த வரலாறிப்போ
கொள்ளிவால் பேய்கள் குடிகொண்ட காலமாச்சே







பேயாட்டம் போடும் யுத்த அரசியல்
பாராட்டப்படுகின்றது பாரறியும் சபை தன்னில்
மாறாட்டமில்லாது தமது மனம் திறந்து
கூறட்டும் சமாதனம்தான் வேண்டும் என்று

மேகங்கள் கூடி மின்னலிடி தோன்றி
இல்லங்கள் மீது தென்றல் அலை மோத
வெறியடங்கி யுத்தம் முடிந்துவிட
உண்மையான சமாதானம் மலர்வதெப்போ?

நாம் வாழ்வதெப்போ?

- கோ.பிரசாத்
(வகுப்பு 10, விபுலானந்தா சிறுவர் இல்லம்)
10/2004
Trackback(0)
Comments (0)Add comments

Write comment

busy
 

பேசும் படம்

2409.jpg

பேசும் படம்...

1309.jpg