| புதுயுகம் படைப்போம் |
|
|
தலை குனிந்து வாழ்ந்த பேதையை அடக்கமெனும் ஆயுதம் கொண்டு அடக்கிவிட்டனர் ! அன்புக்கு அடிபணிந்த மடந்தையை அடிமைச் சங்கிலி கொண்டு பூட்டிவிட்டனர் ! இரக்கத்திற்கு மயங்கிய பேதையை பரிவு எனும் தடவலினால் தட்டிவிட்டனர் ! மலர்களாய் மணம் பரப்பிய மங்கையை ![]() மலர் நுகரும் வண்டுகளால் அழித்துவிட்டனர் ! பூமாதேவியாய் பொறுமை காத்த பெண்களோ கல்லறைகளுக்கு காவலாகிவிட்டனர் ! கவிதைக்கு அழகு சேர்த்த கன்னியோ கல்யாணச் சிறைக்குள் கைதியாக்கப்பட்டனள் ! இவ்வாறு- பெண்களின் தன்மையை பெண்மை என்ற பெயரில் தரம் தாழ்த்திய சமுதாயத்தை புறம் தள்ளி புறப்படு பெண்ணே புது யுகம் படைத்து அடிமைகளாக மாண்ட மடந்தைகளின் கல்லறைகளை முற்றுகையிடுவோம். - விமலசாந்தி (வகுப்பு 9) (யோகசுவாமி மகளிர் இல்லம்) 10/2004 |