| அன்பின் சிகரம் அன்னை |
|
|
பத்துத் திங்கள் பாசமுடன் எம்மைச் சுமந்து இவ்வுலகில் எமைப் பெற்றெடுத்தாள் அன்னை நித்தம் நித்தம் எம் நினைவுகளுடனே - எம் சித்தம் மகிழ்ந்திட சீருடனே வளர்ப்பவள் அன்னை பாராட்டிச் சீராட்டிப் பாலூட்டி எம் மீது தீராத அன்பைப் பொழிபவளே அன்னை பாரினில் எம்மைப் பெற்றெடுத்த அன்னை யாராலும் நிகர்க்க முடியா அன்பின் சிகரம் அன்பினை இன்பத் தேனாக ஊட்டி அவனியிலே எமக்கு நல்வழிகள் காட்டி அன்புடனே எமை வாழவைப்பவனே அன்னை அவனியில் அன்னையே அன்பின் சிகரம் அறுசுவை உணவுகளை அன்புடனே ஊட்டி பொறுப்புடனே பொறுமையோடு உலகு போற்ற எமை வாழவைக்க அன்புடனே அரவணைத்து அறிவுகள் பல சொல்வாள் அன்னை அன்னைக்கு நிகர் அவனியில் யாரும் இல்லை அன்னையின் அன்பிற்கு இல்லையொரு எல்லை பண்புமிகு அன்புமிகு அன்னையை அன்றி அன்பு கொண்டோர் யாருமேயில்லை - ரதீஸ் (வகுப்பு 7, விபுலானந்த சிறுவர் இல்லம்) 10/2004 |