யுத்தம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
விடியற்காலையில்
யன்னலைத் திறந்தபோது
இரத்த வெள்ளம்
வழிந்தோடியது.

நான் பார்க்க விரும்பியதோwar
அதிகாலை
சூரியனைத்தான்.

கதவைத் திறந்தால்
வெளியே
இறந்த உடல்கள்தான்.


நான் காண விரும்பியதோ
அழகான
பூக்களைத்தான்.

என்ன நடக்கிறது?
அடுத்தவரிடம் கேட்டேன்.

யுத்தம்.
பதில் வந்தது.

வெளியே போக
முடியவில்லை.

- விஜிகலா


(வகுப்பு 9, யோகசுவாமி மகளிர் இல்லம்)

10/2004
 
மழை PDF அச்சிடுக மின்னஞ்சல்
நீல வானம் இருண்டது.
நெடிய மேகம் திரண்டது.
மேளம் போல இடித்தது.
மின்னல் வானில் வெடித்தது.

சீறிக் காற்றும் எழுந்தது.
சேர்ந்து மழையும் பொழிந்தது.rain
பாறி மரமும் வீழ்ந்தது.
பாய்ந்து வெள்ளம் வழிந்தது.

ஆறாய் நீரும் பாய்ந்தது.
அருவியாகப் பரந்தது.
சேறாய் வயலும் நிறைந்தது.
செந்நெல் பூத்துச் சிரித்தது.

வரண்ட மண்ணும் நனைந்தது.
செடியும், கொடியும் தழைத்தது.
இருண்ட வாழ்வு அகன்றது.
எல்லோர் மனமும் குளிர்ந்தது.

- சுபாசினி
(சக்தி சிறுவர் இல்லம்)
7/2005
 
பூவிடம் கேட்பேன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
பூவே,
மலர்ந்து வண்டுக்கு
அமிர்தம் கொடுப்பாயா?


சூரியனைக் கண்டு
பூவே சிரிப்பாயா?

தென்றல் காற்றில்poovidam kedpen
குதூகலமாய் ஆவாயா?

தேனருந்தும் வண்டுகளை
வாவென்று அழைப்பாயா?

பூவே,
எனது அப்பா, அம்மா
எங்கே என்றும் சொல்வாயா?

- விஸ்ணுகாந்தன்
(வகுப்பு 8, விபுலானந்தா சிறுவர் இல்லம்)
10/2004
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 அடுத்தது > முடிவு >>

பக்கம் 1 - 7

பேசும் படம்

2109.jpg

பேசும் படம்...

0909.jpg