எப்படி உதவலாம்?
எப்படி உதவலாம்? அச்சிடுக மின்னஞ்சல்
நிதி என்பது பாரதூரமான விடயம். அதுவும் பொதுவிடயங்களில் இது குறித்து நல்ல அபிப்பிராயங்கள் இல்லை. ஊழல்களும், கையாடல்களும் மலிந்துள்ள நிலையில் நிதி தரப் பின்னிற்பதும், சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதும் புரிந்து கொள்ளப்படக் கூடியதே.

உதவி-யின் நிதி விபரங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு நிதி தருபவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு மாதமும் உதவி-க்கு கிடைக்கும் நிதி விபரமும், சிறுவர் இல்லங்களுக்கு கொடுக்கப்பட்ட நிதி விபரமும், பெற்றுக் கொண்ட நிதிக்கான சிறுவர் இல்லங்களின் உறுதிப்படுத்தல்களும் நிதி தருவோர் பார்வைக்கு உதவி- இணையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

தமது நிதி சரியாகக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிக்கும் மேலதிக பொறுப்பு தம்மை உதவி- இணையத்தில் பதிவு செய்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது நிதியுதவி மட்டுமே உதவி- இணையத்தால் சேகரித்து அனுப்பப்படுகிறது. இந்த நிதியுதவி இன்றுவரை குழந்தைகளின் உணவுத் தேவையில் ஒரு பகுதிக்கு உதவுவதைத் தவிர வேறெதற்கும் போதவில்லை.

உங்கள் நிதியுதவியை -

- உங்களால் இயன்ற தொகையாக மாதாந்தம் தரலாம்.
- உங்களால் இயலும்போது தரலாம்.
- உங்கள் குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்தை உதவி- இணையத்தில் வெளியிடுவதற்காகத் தரலாம்.
- உங்கள் உறவை உதவி- இணையத்தில் நினைவு கூர்ந்து தரலாம்.
- உங்களால் நடாத்தப்படும் நிகழ்வுகளில் சேகரித்துத் தரலாம்.

- வேறும் உங்களால் இயன்ற வழிகளில்....


பிறந்தநாள்


உங்கள் பிள்ளைகளின் பிறந்தநாளை உதவி இணையம் மூலமாக உங்கள் உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதுடன் உங்கள் பிள்ளையின் பெயரால் சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும் பிள்ளைகளுக்கும் உதவுங்கள்.

சிறியளவிலான உங்கள் பிள்ளையின் புகைப்படத்துடன் பிறந்த திகதி, வாழ்த்துபவர் பெயர், உறவுகளை மட்டும் உதவி- முகவரிக்கு அனுப்பி வையுங்கள். பிறந்தநாளுக்கு 7 நாட்களுக்கு முன்னர் உங்கள் நிதி உதவி- வங்கிக் கணக்கிற்கு கிடைத்திருக்க வேண்டும்.

இந்த பிறந்தநாள் வாழ்த்துக்காக நீங்கள் தரும் நிதி (150,- யூறோவிலிருந்து) சிறுவர் இல்லங்களில் வாழும் பிள்ளைகளைச் சென்றடைந்து அவர்களுக்கு உதவுவதே பெறுமதியான வாழ்த்தாக உங்கள் பிள்ளையைச் சேரட்டும்.

நினைவுநாள்


இவ்வுலகை விட்டுப் பிரிந்திருந்தாலும் உங்கள் மனதைவிட்டு நீங்கா உறவுகளை உதவி- இணையம் மூலமாக நினைவு கூர்வதுடன் உங்கள் உறவுகளின் பெயரால் சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும் பிள்ளைகளுக்கும் உதவுங்கள்.

நீங்கள் நினைவு கூருபவரின் சிறியளவிலான புகைப்படத்துடன் அவரின் தோற்றம், மறைவு, நினைவு கூருவோரின் பெயர்கள், உறவுகளை மட்டும் உதவி- முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நினைவுநாளுக்கு 7 நாட்களுக்கு முன்னர் உங்கள் நிதி உதவி வங்கிக் கணக்கிற்கு கிடைத்திருக்க வேண்டும்.

உங்கள் உறவை நினைவு கூர்ந்து நீங்கள் தரும் நிதி (100,- யூறோவிலிருந்து) உங்கள் உறவின் அன்பாக சிறுவர் இல்லங்களில் வாழும் பிள்ளைகளைச் சென்றடைந்து அவர்களுக்கு உதவட்டும்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( Friday, 26 March 2010 15:59 )
 


பேசும் படம்

0709.jpg

பேசும் படம்...

1609.jpg