நீங்கள் விமர்சனங்கள், ஆலோசனைகள், பயனுள்ள தகவல்கள் வைத்திருக்கிறீர்களா? எந்த விடயம் இங்கே விடப்பட்டுள்ளது அல்லது எந்த விடயம் பற்றி கூடுதலாக அறிய விரும்புகிறீர்கள்?எங்களுக்கு எழுதியனுப்புங்கள். உங்கள் கருத்துகள் உதவி.நெற்றை நெறிப்படுத்தட்டும்.
mail at uthawi.net
|
|
கடிதங்கள் - 2005 |
|
|
இலங்கையில் சிறுவர் இல்லங்களில் வாழும் பிள்ளைகளின் ஆக்கள் அனைத்தும் வாசித்து ஆச்சரியமடைந்தேன். இந்த இல்லங்களில் வாழும் பிள்ளைகள் துன்பத்திற்கும் அதிர்ச்சிக்கும் மத்தியிலும்கூட தைரியத்துடனும் வலுவுடனும் இவ்வகையான நல்ல கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியிருப்பது என்னை ஆச்சரியப்படுத்தியது. அவை மதிப்பிற்குரியவைகள்தான்! அவர்களுக்கு கவிதைகளும் கட்டுரைகளும் எழுதவும் அதற்கூடாக மனிதர்களை உந்துவதற்கும் திறமை உண்டென்று நான் நினைக்கிறேன். இதனை மனதிற்கொண்டு தொடர்ந்தும் அவர்கள் எழுதவேண்டும். வாசிப்பவர்கள் என்னைப்போலவே ஆச்சரியத்திற்குள்ளாவார்கள். - ஆரபி (வகுப்பு 9), (ஜேர்மனி), 09.03.2005
வயதுக்கு மீறிய வரிகள் மனம் கலங்க வைத்தது. வாழ்த்துகள். - மணியன் (உதவி வலைப்பதிவுக்கு எழுதியது), 21.02.2005
விஸ்ணுகாந்தனின் கவிவரிகள் அருமை வாழ்த்துகள். - சண்முகி, (உதவி வலைப்பதிவுக்கு எழுதியது), 20.02.2005
சதீஸ்காந்தன், மதனசேகரம் போன்ற சிறுவர்களின் கவிதைகள் உருக்கமாயும், மனதை நெகிழச்செய்வதாயும் இருக்கின்றன. எதையோ கற்று அறிய வேண்டிய இந்தச் சின்னஞ்சிறார்கள் இழப்பையும், துயரத்தையும் பாடுவதாகிப்போன காலத்தை என்னவென்று சொல்வது?
9ஆம் வகுப்பு படிக்கும் விமலாசாந்தி இந்த வயதிலேயே யதார்த்தத்தின் கொடுரத்தைப் புரிந்துகொண்ட விதம் வியப்பளிக்கின்றது. தொடர்ந்து எழுதச் சொல்லி உற்சாகப்படுத்து வேண்டும்.
விஸ்ணுகாந்தனின் - 'பூவே எனது அப்பா அம்மா எங்கே என்றும் சொல்வாயா?' வாசிக்கும் நமக்கு சாதாரண சொற்களாய்தானிருக்கும். ஆனால் அது கொடுக்கும் பாதிப்பு அப்படியிருப்பவர்களுக்குத்தான் முழுதாய் புரியும். செஞ்சோலையில் சில நாட்கள் நின்றபோது இந்த துயரத்தின் சிறுதுளியை அவர்களிடமிருந்து நானும்அறிந்திருக்கிறேன். - டி சே தமிழன், (புழுதி வலைப்பதிவுக்கு எழுதியது), 19.02.2005
எப்படி சுகம்? என்ன செய்கிறீர்கள்? சுனாமி அனர்த்தம் நிகழ்ந்தது எமக்கும் வருத்தம்தான். உங்கு வந்து உங்களுக்கு உதவிசெய்யவே மிகவும் விருப்பமாக இருந்தபோதும் நாம் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருப்பதால் உங்கு வரமுடியாது. எனது பெயர் ரற்யானா. வயது 13. ஆறாம் வகுப்பின்; ஏ பிரிவில் படிக்கிறேன். எனது பெயர் மறீ கிளெயர். எனது வயதும் 13. ஏழாம் வகுப்பில் பீ பிரிவில் சிறுமிகளுக்கான பள்ளி ஒன்றில் படிக்கிறேன். உங்களை அறிமுகம் செய்யுங்களேன். வணக்கம்! - Tatjana, Marie-Claire, (Germany), 17.02.2005
உங்களது அனைத்து நல்ல வேலைகளுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் இணையத்தளத்தில் பெரிய முன்னேற்றத்தை என்னால் காணக்கூடியதாகவுள்ளது. அத்துடன் அனைத்துத் தகவல்களையும் பெறக்கூடியதாகவும் உள்ளது. இந்தத் முயற்சியை பிள்ளைகளுக்கு உதவுவதற்கு நீங்கள் உருவாக்கியது மிகவும் நல்ல விடயமாகும். இந்த வேலையைத் தொடர்வது மிகவும் முக்கியமானது. - பிரபாகரன், (இங்கிலாந்து),16.02.2005
நண்பர் யசிதரன் அவர்களுக்கு! தங்களது கடிதத்தினை உதவி இணையகத்தில் பார்வையிட முடிந்தது. தங்கள் கடிதம் தொடர்பாக நண்பர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டிருந்தீர்கள். அது தொடர்பாக எனது கருத்தினை இங்கு குறிப்பிட்டுள்ளேன். உதவி தனது சுய விருப்பின் அடிப்படையில்தான் உதவி வழங்குவதற்கான இல்லங்களை தெரிவு செய்தது. அந்த வகையில் தெரிவு செய்யப்பட்ட இல்லங்களின் அடிப்படை வசதிகளுக்கு நிதி உதவியை தொடர்ந்து வழங்கி வருகின்றது. ஏற்கனவே இல்லங்களாக இயங்கிக் கொண்டு இருந்த இல்லங்களைத்தான் தெரிவு செய்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவ் இல்லங்களின் பொறுப்பாளர்களது செயற்பாட்டில் அக்கறையீனங்கள் நிகழ்வதை நாம் சுட்டிக் காட்டுவதற்கு நமக்கு உரிமை இருக்கு என்பதை மறுப்பதற்கும் இல்லை. ஆனால் அதனை சற்று நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் கையாளவேண்டிய தேவை நமக்குண்டு. ஏனெனில் இவ்வாறான தன்முனைப்பு வேலைகளில் ஈடுபடுபவர்கள் மிகமிகக் குறைவாகவேயுள்ளார்கள் அவ்வாறு முன்வருபவர்களது சிந்தனை போக்கில், அவர்களது கருத்தியல், பகுத்தறிவியல் இவையெல்லாம் தாக்கம் செலுத்துகின்றது. ஒவ்வொரு இல்லங்களின் வளர்ச்சிக்கும், எண்ணங்களுக்கேற்பவே செயற்பாடும் அமையும். பொறுப்பாளர்களது அக்கறையீனங்களின் செயற்பாடும் சரி, ( அதாவது நாம் வலிந்து போய்செய்வதான தன்மை உங்களுக்கு ஏற்பட்டுள்ளது) அவர்களின் செயற்பாட்டை மட்டுமே கருத்திற்கொண்டு இல்லங்களுக்கு உதவி செய்வதை முடிவெடுப்பதும் குழந்தைகளைத்தான் பாதிக்கும் அல்லவா?. ஆகவே நமது சிந்தனையையும் செயற்பாட்டையும் சற்று இன்னும் விரிவுபடுத்தி பார்ப்பதன் மூலமே இந்த பிரச்சனையில் இருந்து வெளிவரமுடியும் என்று நம்புகின்றேன். ஏற்கனவே உதவிக்காக உங்கள் உழைப்பைச் செலுத்தும் நீங்கள் இன்னும் சற்று அதிகரிப்பதன் மூலம் வேறு நண்பர்களை இணைத்துக் கொள்வதன் மூலமும் சற்று வேலைச் சுமையைக் குறைத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றேன். இல்லங்கள் தொடர்பான எண்ணப் பாடுகள் தொடர்பாக எழுதியிருந்தீர்கள். வாசித்தபோது மிகவும் வேதனையாக இருந்தது. எமது சமூக சிந்தனையில் மாற்றங்கள் நிகழவில்லை என்பதுடன், இன்னும் குழந்தைகளுக்கும் சமூகத்துக்குமான அந்நியத்தன்மை வளர்க்கப்பட்டுக் கொண்டு வருவதையும் அவதாணிக்க முடிகின்றது. இது தொடர்பாக நீங்கள் கவனத்திற் கொண்டு வேலை திட்டங்களை முன்கையெடுத்தால் என்ன? சமூகத்தின் மத்தியில் கருத்து பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியாதா? குறைந்த பட்சம். இல்லங்களின் பொறுப்பாளர்களுக்கும் தமது செயற்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வை அடைவதற்கும் வாய்ப்பு உருவாகும். இல்லங்களில் சமயம் வளர்ப்பது தொடர்பாக சற்று கடுமையாகவே நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். எமது சமூகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு செயற்பாடும் சமயத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுக்கொண்டு வருகின்றது. இல்லங்களில் வளர்க்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கு தற்காலிக சந்தோசங்களைத்தான் நாம் கொடுக்க முடியுமே தவிர அவர்களது உணர்வுரீதியான தேடலை நாம் நிவர்த்தி செய்துவிட முடியாது. ஏனெனில் குழந்தைகள் வாழ்வது உணர்வுரீதியாக. அந்த உணர்வுரீதியான ஆறுதலும் அன்பும் தனது தாயிடமே பெற்றுக் கொள்ள முடியும். இது அடிப்படையான உண்மை. சமய வழிபாட்டு முறையும் குழந்தைகளுக்கு தற்காலிகமான ஆன்மீக தேடல்தான். இது தொடர்பாக நாம் அதிகம் கேள்விக்குள்ளாக்காது விடுவது நல்லது என்று எண்ணுகின்றேன். குழந்தை ஒரு காலகட்டத்தில் தனது அறிவியல் வளர்ச்சிக்கு பின்னர் அதை உணரும். இதற்கு மாற்று வழிமுறையாக இசையைக் கற்றுக் கொடுக்கலாம். ஆனால் எமது சமூகத்தை பொறுத்தவரை இசையும் சமயத்துடன் இணைந்ததாகவே இருக்கின்றது. ஆனாலும் இசை வளர்ந்த பின்னரும் உணர்வுரீதியான ஆறுதலைக் கொடுக்கக் கூடியது. இல்லங்களில் இசையைக் கற்றுக் கொடுப்பதற்கு வலியுறுத்திப் பாருங்களேன் பொறுப்பாளர்களிடம். - வளர்மதி, (சுவிஸ்), 04.02.2005
தங்களது உதவி விசியோன்-1 கிடைத்தது. தங்களது முதன் முயற்சி உண்மையிலே சிறப்பாக அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய கடமை எமக்குண்டு. காட்சிகள் அமைத்த விதமும், காட்சிகளுக்கு ஏற்ப இசைகளை அமைந்த விதமும் உண்மையிலே நன்றாக அமைந்துள்ளது. தொடர்ந்தும் உங்களது முயற்சி தொடரவேண்டும் என்று வாழ்த்துகின்றோம். ஆனாலும் சிறு குறையிருக்கின்றது. இதனை மற்றவர்கள் சுட்டிக் காட்டினார்களா என்பது எனக்குத் தெரியாது. அதாவது குரல் மூலம் காட்சிகளை விவரணப்படுத்தியிருந்தாலோ அல்லது கவிதை வடிவில் விவரணப்படுத்தியிருந்தாலோ மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும். ஏனெனில் உதவியுடன் தொடர்பற்ற நபர்களுக்கு காட்சிகளை விவரணப்படுத்தவேண்டியிருக்கின்றது. எமது இல்லக் குழந்தைகள்தான் இவர்கள் என்று காட்சிகளின் நிகழ்வையும் விளங்கப்படுத்தவேண்டியமைந்துள்ளது. உதவிவிசியோனுக்காக தெரிவு செய்த பாடல் உணர்வுரீதியாக தாக்கத்தை செலுத்தியிருந்தது எம்மிடையே. (அதன் அர்த்தம் விளங்காதவிடத்தும்) இங்கு மொழி அல்ல மனிதாபிமான உணர்வுதான் செயற்பாட்டுக்கு முக்கியம் என்பதை தெளிவுபடுத்திற்று இந்த உதவிவிசியோன். - சுவிஸ் நண்பர்கள் சார்பாக, வளர்மதி, 04.02.2005
உங்களது முயற்சிக்கு வாழ்த்துகள். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேகரித்தக் கொண்டிருக்கிறோம். நாங்கள் நேரடியாக உதவக்கூடியதாக, இலங்கையில் சுனாமியால் சிறுவர்பராமரிப்பு இல்லங்கள் ஏதேனும் பாதிக்கப்பட்டுள்ளனவா? - Diana Gevers, (?), 11.01.2005
டிசம்பர் 26ஆம் திகதிய சுனாமி அழிவுக்கு சிலநாட்களுக்கு முன்தான் உங்களது உதவி இணையத்தைப் பார்த்தேன். 5 சிறுவர் பராமரிப்பு இல்லங்களுக்கு நீங்கள் உதவுவதையிட்டு நான் அதிசயப்படுகிறேன். அவர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என்று நம்பினாலும், அழிவையிட்டுப் பயப்படுகின்றேன். இது பற்றிய புதிய தவகல்கள் கிடைத்தால் எனக்கு அறியத் தருவீர்களா? உங்களிடமிருந்து தகவல் வரும் என எதிர்பர்த்திருக்கிறேன். - Robert van der Kam, (USA), 07.01.2005
உங்களைப் பற்றி பத்திரகை மூலம் அறிந்துகொண்டோம். நானும், எனது மனைவியும் பிள்ளைகளுக்கு உதவ விரும்புவதால், எந்த வழியில் இலங்கையிலுள்ள பிள்ளைகளுக்கு உதவலாம் என தெரிந்து கொள்வதற்காக எங்களுடன் தொடர்புகொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம். - Gabi + Mathias, (Germany), 06.01.2005
உதவியுடன் தொடர்புள்ள விபுலானந்தா இல்லத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றேன். எத்தனை பிள்ளைகள் இந்த இல்லத்தில் இருக்கிறார்கள்? நான் நேரடியாக இந்த இல்லத்துடன் தொடர்பு கொள்ளலாமா? யாருடன் தொடர்புகொள்ள வேண்டும்? இந்ப் பிள்ளைகளுக்கு உதவ விரும்புகின்றேன். - சாமினி, (சிங்கப்பூர்), 06.01.2005
உங்கள் இணையம் நிறையத் தகவல்களைக் கொண்டுள்ளது. 27 வருடங்களுக்கு முன் நான் ஒரு குழந்தையைத் தத்தெடுத்த சிறுவர் பராமரிப்பு இல்லம் தொடர்பாக உங்கள் உதவி தேவை. பாணந்துறையிலுள்ள அந்த இல்லத்தின் பெயர் பிரஜபதி. இநத இல்லம் தொடர்ந்து இயங்குகிறதா என்பதை அறியவதற்கான எல்லாத் தொடர்புகளையும் இழந்துவிட்டேன். சுனாமிப் பேரழிவினால் இந்த இல்லத்தின் பாதுகாப்பை பற்றி அறிந்து கொள்வதில் அக்கறையாயுள்ளோம். யாராவது எனக்குத் தகவல் தந்து உதவ முடியுமா? - Kay Van Pelt, (Australia), 04.01.2005 |
|
<< தொடக்கம் < முன் 1 2 3 அடுத்தது > முடிவு >>
|
|
பக்கம் 1 - 3 |